தொடர்ந்து குவிந்த ஆர்டர்கள், டெலிவரி செய்ய முடியவில்லை – ஊழியர்களை பணியமர்த்தும் அமேசான்..?

0

கொரோனா வைரஸ் என்னும் நோயால் மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருக்கிறார்கள்.உயிர்கொல்லியின் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

நாங்கள் தான் வல்லரசு நாடு

உலகிலேயே நாங்கள் தான் வல்லரசு என கெத்தாக சொல்லிக்கொண்டு இருந்த அமெரிக்கா இன்று கொரோனாவின் மையமாக உள்ளது.அதனால் அமெரிக்காவில் வீடுகளுக்குள் முடங்கி உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் மூலம் பெற்று வருகிறார்கள்.அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு கூறி வருகிறது.

ஆர்டர்கள் அதிகரிப்பு ஆட்கள் இல்லை

முக்கியமாக அமேசானில் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆன்லைனில் வரும் முன்பதிவுகளுக்கு ஏற்ப பொருட்களை டெலிவிரி செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் டெலிவெரி செய்ய தேவைப்படுவதாக அமேசான் அறிவித்துள்ளது

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலும் ஒட்டுமொத்த துறையும் முடங்கி போனாலும், ஆன்லைன் மளிகை வியாபாரம் மட்டும் ஓயவில்லையாம். அந்தளவுக்கு ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றனவாம். ஒரு புறம் ஆள் பற்றாக்குறையால் ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வரும் இந்த நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை தவிர்த்து வருகின்றனவாம்.மேலும் தங்களது குடோன்களில் சரக்கு இருப்பும் குறைந்து வருவதால் மற்ற மொத்த வியாபாரிகளிடம் வாங்கி தான் சில இடங்களில் டெலிவரி செய்து வருகின்றனவாம். இதனால் ஆர்டர்களை டெலிவரி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசான் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசானில் முன்பு இருந்ததை விட, கொரோனா பரவத் தொடங்கிய இந்த காலத்தில் 60% அதிகமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை சமாளிப்பதற்காகத் தான் அமேசான் புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது

டெலிவரி நிறுவனங்கள் & பங்கும்

அதிலும் சமூக விழிப்புணர்வு, போதுமான இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் முடிந்தால் பாதுகாப்பாக அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள ஊக்குவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. எப்படியோங்க.. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், அதிலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் மக்கள் வெளியே வருவதை தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

ஆன்லைன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்

ஆன்லைன் முன்பதிவு பொருட்களை வினியோகிக்க முடியாத நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதாக  அறிவித்துள்ளன.ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதால் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here