ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ல் திட்டமிட்டபடி வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும்..!

0

சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிதித்துறை அதிகாரிகள், வங்கி தலைமை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எந்த விதமான உடன்பாடுகளும் ஏற்படாததால் திட்டமிட்டபடி இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிகிறது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

12.25 சதவீத சம்பள உயர்வு, வங்கி இணைக்கப்படும் போது அளிக்கப்படும் சிறப்புக் கொடுப்பனவு தொகையை அடிப்படை சம்பளத்தில் இணைப்பு, அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கட்டாயம் 5 நாள் வேலைநாள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற உள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

மேலும் கோரிக்கை விரைவில் நிறைவேற்றபடவில்லை என்றால் வருகிற 31-ந் தேதி மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் வேலைநிறுத்தம் நடைபெறும். பொதுத்துறை, தனியார்துறை, அயல்நாட்டு வங்கிகள் என எல்லா வங்கிகளும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் வங்கித்துறை வர்த்தகம் பெரிதளவில் பாதிக்கப்படும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here