வலிமை திரைப்படத்தில் இருந்து விலகும் பிரபலங்கள் – அதிர்ச்சியில் படக்குழு

0

கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் வலிமை திரைப்படத்தின் அப்டேட்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி. படக்குழுவில் இருக்கும் மூத்த நடிகர்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு படத்தில் இருந்து விலகியதாக செய்தி.

வலிமை:

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் காரணமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர் தான் தல அஜித். இவர் தனது ரசிகர்களால் பாசத்தோடு தல என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.

இருந்தாலும் அந்த ஒரு படத்தை காண ரசிகர்கள் ஒரு வருடம் தவமிருந்து காத்து வருவர். அந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் செம மாசை பெற்றுள்ளார் தல அஜித். தற்போது அவரது வெளிவரவிருக்கும் வலிமை திரைப்படமானது கடந்த இரண்டு ஆண்டு காலமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னணி நடிகர்கள் சிலர் உடல் நிலையை கருத்தில் கொண்டு கொரானாவுக்கு பயந்து படத்திலிருந்து விலகி விட்டார்களாம். ஏற்கனவே அவர் நடித்த காட்சிகளுக்கு என செய்வது என படக்குழு விழி பிதுங்கி நிற்கிறது. அப்டேட் கிடைக்கும் என காத்திருந்த தல அஜித் அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here