என்னப்பா சொல்றீங்க.. விவாகரத்து நேரத்தில் இப்படி ஒரு பதிவா?? வைரலாகும் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா போஸ்ட்!!

0

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் குபேரா திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவை  பிரிய போவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 8) விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி மனு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த பரபரப்பான சூழலில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ஓர் போஸ்ட் போட்டிருக்கிறார். அதில், Healthy body +happy mind+humane heart =magic portion to a meaningful life என்ற  கேப்சனுடன் உடற்பயிற்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இந்த நேரத்தில் இப்படியொரு போஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை, தனுஷுடன் சேர்ந்து வாழவும் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here