பீச்சில் உல்லாசமாக போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக பார்க்கப்படும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது லேடஸ்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஐஸ்வர்யா மேனன்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பல நடிகைகள் சீரியலில் இருந்து தான் பிரபலம் அடைந்து வருகின்றனர். தங்களது கடின உழைப்பின் காரணமாக பலரும் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருகின்றனர்.

ஈஸ்டர் சண்டேவை ஹாப்பி சண்டேவாக மாற்றிய நயன்தாரா விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படம்!!

அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகை என்றால் அது ஐஸ்வர்யா மேனன். இவர் முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தென்றல்” என்ற சீரியலின் மூலமாக தான் அறிமுகமானார்.

சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போதே திரை வாய்ப்புகளை தேடி வந்த ஐஸ்வர்யா மேனன், முதன் முதலாக “காதலில் சொதப்புவது எப்படி” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின்பாக தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதே போல் கன்னட திரைப்படங்களிலும் தனது கவனத்தினை செலுத்தி நடித்து வந்தார். இப்படியாக இருக்க இவர் நடிகர் மிர்ச்சி சிவாவுடன் “தமிழ் படம் 2” திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக நடித்தார். இதன் காரணமாக இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

இப்படியாக இருந்தாலும் இவருக்கு பெரும் பெயரினை எடுத்து கொடுத்த திரைப்படம் என்றால், அது நடிகர் ஆதியுடன் நடித்த “நான் சிரித்தால்” திரைப்படம் தான். இதற்கு பின்பாக இவர் மிகவும் பிரபலமான நடிகையாக மாறி விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here