ஈஸ்டர் சண்டேவை ஹாப்பி சண்டேவாக மாற்றிய நயன்தாரா விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகில் காதல் ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நேற்று ஈஸ்டர் திருநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

காதல் ஜோடி

திரையுலகில் அறிமுகமாகி சில ஆண்டுகளிலேயே பல முன்னணி நடிகர்களோடு நடித்து விட்டு தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் தான், நயன்தாரா. இவர் முதன் முதலாக தமிழில் “ஐயா” திரைப்படம் மூலமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இப்படியாக இருக்க இவர் கடந்த சில ஆண்டுகளில் பல காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

ஜோடியா விஜய் டிவிக்கு வந்துட்டீங்களா?? புதிய சீரியலில் களமிறங்கும் “திருமணம்” ஸ்ரேயா!!

இதன் காரணமாக இவர் சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார் என்று கூட சொல்லலாம். இப்படியாக இருக்க இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு பின்பாக, இவருக்கு விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டது. அதே போல் தான் விக்னேஷ் சிவனுக்கும். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்றனர். அதே போல் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். இது குறித்து கிசுகிசுக்கள் வந்த போது இருவருமே அமைதியாக இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இருவரும் காதலிப்பது உறுதியானது. இதில் உச்சகட்டமாக சில நாட்களுக்கு முன்பு இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். இப்படியாக இருக்க இருவரும் நேற்று ஒன்றாக கிருத்துவ பண்டிகையான ஈஸ்டரை கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here