இனி இறந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ஓய்வூதியம் இல்லை?நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
நேபாளத்தில் மக்கள் கடைப்பிடித்து வரும் சம்பிரதாயங்களில் முக்கியமான ஒன்று என்றால் அது ராணுவ வீரர்களுக்கு பன்மை திருமணங்கள் செய்ய படுவது தான். அதாவது கோர்க்கா ராணுவ வீரர்கள் இரண்டு திருமணம் செய்து கொள்ள அந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இந்த இரண்டு திருமணம் செய்வதில் ஒரு சிக்கல் முளைத்துள்ளது. அதாவது ராணுவ வீரர் இறந்த பிறகு  குடும்ப ஓய்வூதியம் முதல் மனைவிக்கு மட்டுமே  வழங்கப்படும் என ஆயுதப்படை தீர்ப்பாயம் (ஏஎஃப்டி) தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு ராணுவ வீரரின் இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதாவது தனது கணவர் ஜூலை 2016 ல் இறந்துவிட்டார் என்றும், அவருடைய முதல் மனைவியும் மார்ச் 2019 இல் இறந்து விட்டார் என்றும், எனவே குடும்ப ஓய்வூதியம் பெற இரண்டாவது மனைவிக்கு உரிமை உண்டு என்று மனுதாரர் வழக்கறிஞர் வாதிட்டார். தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில் இறந்த ராணுவ வீரரின் பணிக்கான ஆவணங்களில் குறிப்பிட்ட பெயருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here