மறு ஒளிபரப்பாகும் நடிகை வாணி போஜனின் சீரியல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

சின்னத்திரை தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அவர் சின்னத்திரையில் நடித்துள்ள தொடர் ஒன்று மீண்டுமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நடிகை வாணி போஜன்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ என்ற தொடரில் நடித்துள்ளார் நடிகை வாணி போஜன். மேலும் சின்னத்திரையில் ‘லட்சுமி வந்தாச்சு’ என்ற தொடரிலும் நடித்துள்ளார் இவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் வாணி போஜன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தொடர்களில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் வெள்ளித்திரையில் கால் பாதிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கடந்த ஆண்டு காதலர்தின சிறப்பாக வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி இவருக்கு அதிகமான ரசிகர்களை சம்பாதித்து தந்தது. மேலும் ‘ட்ரிபிள்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்யுடன் நடித்திருந்தார் வாணி போஜன். அடுத்ததாக இவர் நடித்துள்ள த்ரில்லர் வகையைச் சார்ந்த திரைப்படம் ‘லாக்கப்’ தற்போது திரைக்கு வரவுள்ளது.

97% கொரோனாவுடன் போராடும் pfizer தடுப்பு மருந்து – சோதனை அமைச்சகம்!!

இந்த படத்தில் நடிகர் வைபவுடன் இணைந்துள்ளார் வாணி போஜன். கடந்த 2019ம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் இவர். மேலும் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘தாழ்திற’, ‘கேசினோ’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வாணி போஜன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடர் மீண்டுமாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தகவலால் தெய்வமகள் மற்றும் நடிகை வாணி போஜன் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here