
மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்புவதில் எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது சன் டிவி. இதில் விறுவிறுப்பாக கதைக்களத்துடன் 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் சந்திரலேகா. இதில் சந்திரா என்ற கேரக்டரில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வந்தவர் தான் ஸ்வேதா.
ஒரு பிளேட் மாறியதை கொடுங்க.., கெஞ்சும் போட்டியாளர்.., ஆண்டவர் எடுக்க போகும் முடிவு.., ப்ரோமோ இதோ!!
இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய மால் முருகனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தது. இந்நிலையில் ஸ்வேதா தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது குழந்தைகளின் புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.