வங்கி வாடிக்கையாளர்களே., இந்த 6 நாட்கள் வங்கி விடுமுறை? ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு!!!

0
வங்கி வாடிக்கையாளர்களே., இந்த 6 நாட்கள் வங்கி விடுமுறை? ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு!!!
வங்கி வாடிக்கையாளர்களே., இந்த 6 நாட்கள் வங்கி விடுமுறை? ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ், பணம் டிரான்ஸ்பர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் வாடிக்கையாளர்கள் மொபைல் போன் மூலமே மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் இன்னும் பல விஷயங்களுக்கு வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த சூழலில் வருகிற டிசம்பர் 4 முதல் 11ஆம் தேதி வரை வங்கி நிறுவனங்கள் வாரியாக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தில் வங்கி பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடா..? மீண்டும் எழுந்த சர்ச்சை.., வெளியான அறிவிப்பு!!!

அதன்படி,

  • டிசம்பர் 4 – பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.
  • டிசம்பர் 5 – பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் பரோடா ஊழியர்கள் வேலைநிறுத்தம்.
  • டிசம்பர் 6 – கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை நிறுத்தம் நடைபெறும்.
  • டிசம்பர் 7 – யூகோ வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.
  • டிசம்பர் 8 – யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகியவற்றில் வேலைநிறுத்தம்.
  • டிசம்பர் 9 – 2வது சனிக்கிழமை
  • டிசம்பர் 10 – ஞாயிற்றுக்கிழமை
  • டிசம்பர் 11 – மற்ற தனியார் வங்கிகளும் வேலை நிறுத்தத்தில் இணையும் என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here