ரயில் பயணிகள் கவனத்திற்கு.., உலக கோப்பையை கான ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., உலக கோப்பையை கான ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., உலக கோப்பையை கான ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்திய மண்ணில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இப்போது கோலாகலமாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் மோத உள்ளனர். இதனால் இந்திய அணி இந்த ஆண்டு மகுடத்தை சூட்டுமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது உலக கோப்பை போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் அகமதாபாத்துக்கு செல்ல உள்ளனர். இதனால் ரசிகர்கள் சிரமமின்றி செல்வதற்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்படும் ரயில் நாளை காலை அகமதாபாத் வந்து சேரும். இறுதி போட்டி முடிந்த பின்பு திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட டெல்லிக்கு செல்லும் என தெரிவித்துள்ளனர். அதேபோல் மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கி வாடிக்கையாளர்களே., இந்த 6 நாட்கள் வங்கி விடுமுறை? ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here