மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்- ஸ்ருதி ஹாசன் அறிவுரை..!

0
Shruthi Hassan
ரெட்ட ஜடை., கண்டபடி ஆட்டம்.., என்னாச்சு ஸ்ருதி ஹாசனுக்கு.., வீடியோவை பார்த்து தெறித்துப்போன இளசுகள்!!

இந்த கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ள நிலையில் மக்கள் அனைவரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதனில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் தான் பின்பற்றும் வழிமுறைகளை பேட்டி ஒன்றில் வழங்கி உள்ளார்.

ஊரடங்கால் மனஅழுத்தம்:

மார்ச் 23 ஆம் தெய்தி அன்று வெளியான ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நாளில் அனைவரும் தீவிரமான மனஅழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதற்கிடையில் நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது இணையதளங்களில் பேசி வருகிறார், இப்போது இணையதள பேட்டி ஒன்றில் தானும் மனஅழுத்தத்திற்காக 3 வருடங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

இயற்க்கைக்கு மாறான சூழல்:

நடிகை ஸ்ருதி ஹாசன் பேட்டியில் கூறியதாவது:

நாம் அனைவரும் இப்படி நெடுநாட்களாக வீட்டில் முடங்கி கிடந்தது இல்லை. இவை அனைத்தும் நமக்கு புதிது. இது பல்வேறு சூழலில் நம்மை பாதிப்பு அடைய செய்கிறது. அதில் முக்கியமான ஒன்று மனஅழுத்தம். அவர் இதுவே தனக்கு முக்கியமான பிரச்சனையாக தெரிகிறது என்று கூறினார். எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்கும் மக்கள் இந்த விஷத்தில் இருப்பதில்லை மேலும் அவர்கள் இதை பற்றி பேச கூச்சப்படுகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அவர் கூறுகையில்”இந்த மனஅழுத்தத்திற்க்கான மருந்து தியானம்,உடற்பயிற்சி மற்றும் நடனம் ஆகும். இதைத்தான் நான் கடைபிடிக்குறேன் மற்றும் இதையே மற்றவர்களுக்கும் பரிந்துரைக்குறேன்”. மேலும் அவர் தான் நிறைய புத்தகங்கள் படிப்பதாகவும், நிறைய இசை கேட்பதாகவும், நிறைய இசையை உருவாக்குவதாகவும் மற்றும் நிறைய எழுத்துவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here