ஆட்டோ & டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி – மாநில அரசு அறிவிப்பு..!

0
jaganmohan reddy
jaganmohan reddy

கொரோனா என்னும் விச கிருமியால் உலகமே பெரும் ஆபத்தில் இருக்கிறது,கொரோனாவால் சிறு குறு தொழில்கள் என பலவும் முடங்கின.ஆனால் ஆந்திராவில் உள்ள ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 வழங்க போவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா” திட்டம்

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் – ரூ.20 லட்சம் நிவாரணம்

ஆந்திராவில் தடேப்பள்ளியில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து  நிகழ்ச்சியில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களின் கஷ்டத்தையும் அவர்களுக்கு நல்லது பண்ணும் எண்ணத்துடன் “ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா” என்னும் திட்டத்தை ஆரம்பிக்க போவதாக கூறினார்.அதாவது ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ரூ.10,000

ஆந்திரா மாநிலத்தில் முதல்வர், ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., – காங்.ஆட்சி நடக்கிறது.அங்கு ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் ஆண்டுதோறும் வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறுவதற்கும், வாகன காப்பீடு பெறவும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.சாப்பாடு சான்று பெறாவிட்டால் தினந்தோறும் ரூபாய் 50 அபராதம் செலுத்த வேண்டி இருப்பதாகவும் ஓட்டுநர்களின் துயர் துடைக்கவே கடந்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ysr scheme
ysr scheme

கடந்த ஆண்டு இத்திட்டத்துக்காக 236 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 262 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளது.இங்கு காப்பீட்டு பிரீமியம், உரிம கட்டணம் மற்றும் தொடர்ச்சியான செலவுகளைச் சந்திக்க ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ10,000 கொடுக்கும் வழங்கும் நோக்கில் ஒய்.எஸ்.ஆர் வாகனா மித்ரா திட்டம் 2019 கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிட்டதக்கது ஆகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here