
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் சிவாங்கி. பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கியூட் எஸ்பிரஸனால் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து டான் படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். மேலும் குக் வித் கோமாளி தற்போது நடைபெற்று வரும் சீசனில் புது அவதாரம் எடுத்து குக்காக களமிறங்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது போதாது என்று யூடியூபில் இவருக்கென்று சொந்தமாக அக்கௌன்ட் தொடங்கி ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வருகிறார். இப்படி அடுத்தடுத்து சோசியல் மீடியாவில் பிஸியாக இருந்து வரும் ஷிவாங்கி ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனக்கு இரு தினங்களாக காய்ச்சல், இருமல் இருந்து வருவதாக கூறியுள்ளார்.
விளம்பரத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு கண்டிஷன்., மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு!!
மேலும் தனது ரசிகர்களுக்கு இனி பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்லுமாறு எச்சரித்துள்ளார். ரசிகர்களாகிய நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நான் காய்ச்சலில் இருந்து மீண்டு வர எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Fever is spreading vastly so maskup everybodyyyy!!! Stay safe makkaleyyy tataa❤️#cookwithcomali4 #sivaangi
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) March 5, 2023