வடக்கன்ஸை ஓட்டி தள்ளிய சுதாகர் – கோபி.., பொறியாளர் சங்கத்திடம் இருந்து பறந்த புகார்!!

0
வடக்கன்ஸை ஓட்டி தள்ளிய சுதாகர் - கோபி.., பொறியாளர் சங்கத்திடம் இருந்து பறந்த புகார்!!
வடக்கன்ஸை ஓட்டி தள்ளிய சுதாகர் - கோபி.., பொறியாளர் சங்கத்திடம் இருந்து பறந்த புகார்!!

யூ-டியூப் தளத்தின் மூலம் பிரபலமானவர்கள் தான் சுதாகர் – கோபி. அவர்கள் நடத்தும் ‘பரிதாபங்கள்’ சேனலை கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமானோர் Follow செய்கின்றனர். மேலும் அவ்வப்போது அவர்கள் வெளியிடும் நகைச்சுவை வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது உண்டு. அவர்கள் யூடியூபை தாண்டி வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளனர். அவர்கள் ஹீரோவாக நடித்த ஜாம்பி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனத்தையே பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இருவரும் ஒரு படத்தை தயாரித்து நடிக்க இருக்கின்றனர். அதற்கான அப்டேட் கூடிய விரைவில் வெளியிடுவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ஒரு அமைப்பு கௌரவித்தது. இந்நிலையில் சுதாகர் – கோபி மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. அதாவது சுதாகர் – கோபி வடக்கன்ஸ் பரிதாபம் என்ற வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோ அனைவருக்கும் சிரிப்பூட்டும் விதமாகவும் சிந்திக்க வைக்கிற விதமாகவும் இருந்தது.

ரசிகர்கள் இல்லாம நான் இல்ல.., படுத்த படுக்கையிலிருந்து மீண்டு வந்த ஷிவாங்கி.., ரசிகர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை!!!

இந்த வீடியோவை பாராட்டி சமீபத்தில் கூட சீமான் பேசியிருந்தார். இப்படி இருக்கையில் இந்த வீடியோவை சுட்டிக் காட்டி தற்போது கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஒரு சில இடங்களில் நடக்கும் தவறினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் கோபத்தை காட்டுவது தவறானது என்றும் சுதாகர் – கோபி நடத்தும் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here