என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால்..!
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார். தற்போது சாக்ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஸ்கூல் படிக்கும் போது எடுத்த தனது புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள அவர் ஸ்கூல் படிக்கும் போது என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள். அப்போது நான் படிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினேன். நம்மை கிண்டல் செய்பவர்களை கண்டுகொள்ளவே கூடாது. அதைதானே விஜய்யும் சொல்லி இருக்கார் என்று பதிவிட்டுள்ளார்.