தொடர்ந்து 2வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

0

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை நேற்றைப் போல் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் நகைக் கடைகள் பெருமளவில் திறக்கப்படவில்லை. இதனால் அதன் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சர்வதேச சந்தை விலை, முதலீட்டாளர்கள் அதிகம் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தியதால் அதன் விலை உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த ஒரு வாரத்தில் வரலாறு காணாத அளவிற்கு விலை அதிகரித்த காரணத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் – பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆபர் மழை..!

Gold Jewels
Gold Jewels

இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்து இருந்தது. அதை தொடர்ந்து இன்றும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 17 ரூபாய் குறைந்து 4,689 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ. 136 குறைந்து 37,512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை பெரிதும் மாற்றம் செய்யப்படாமல் ஒரு கிராம் 55.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 55,500 க்கும் விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here