அந்த வாழ்க்கை என்னுடைய கனவு., ஒரே நாளில் முடிஞ்சுடுச்சு., கடந்த காலத்தை நினைத்து கண்கலங்கிய சதா!!

0
அந்த வாழ்க்கை என்னுடைய கனவு., ஒரே நாளில் முடிஞ்சுடுச்சு., கடந்த காலத்தை நினைத்து கண்கலங்கிய சதா!!
அந்த வாழ்க்கை என்னுடைய கனவு., ஒரே நாளில் முடிஞ்சுடுச்சு., கடந்த காலத்தை நினைத்து கண்கலங்கிய சதா!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் சதா. இவர் நடித்த ஜெயம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் ஜொலித்து வந்த இவர் தற்போது டான்ஸ் ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் பிஸியாக நடித்து வந்த போதே காபி ஷாப் ஒன்றை தொடங்கினாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

ஒரு சில மாதங்களில் அதில் நல்ல வருமானம் கிடைக்க தொடங்கியதாம். இதனால் அந்த கடையில் பல்வேறு உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினாராம். அந்த நேரத்தில் கடையின் உரிமையாளர் 1 1/2 மாதத்தில் கடையை காலி பண்ணும் படி கூறிவிட்டாராம். ஆனால் அந்த கடைக்காக சதா எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தினாலும் உரிமையாளர் மனம் மாறவில்லையாம். இதனால் கடையில் இருந்த ஒவ்வொரு பொருட்களையும் கண் கலங்கியபடி விற்றேன் என கூறியுள்ளார். இப்படி கனவுகளுடன் தொடங்கிய பிசினஸ் ஒரே நாளில் முடிந்து போயிருச்சு என கூறி வருத்தப்பட்டுள்ளார்.

அதிரடியாக வெளியான ”ஜிகர்தண்டா டபுள் X ” பட பர்ஸ்ட் சிங்கிள் சாங்., இணையத்தில் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here