தனது குழந்தையின் முகத்தை முதன் முதலாக காட்டிய பிரியங்கா சோப்ரா.., இணையத்தில் கசிந்த அழகிய கிளிக்ஸ்!!

0
தனது குழந்தையின் முகத்தை முதன்முதலாக காட்டிய பிரியங்கா சோப்ரா.., இணையத்தில் கசிந்த அழகிய கிளிக்ஸ்!!
தனது குழந்தையின் முகத்தை முதன்முதலாக காட்டிய பிரியங்கா சோப்ரா.., இணையத்தில் கசிந்த அழகிய கிளிக்ஸ்!!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது மகளின் முகத்தை உலகிற்கு அறிமுக படுத்தும் விதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா:

பாலிவுட் வட்டாரங்களில் எண்ணற்ற பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்து முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2002ம் ஆண்டு தளபதி விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் தமிழன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்ததால் நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் பக்கம் சென்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பாலிவுட்டில் கால் வைத்த நேரமோ என்னமோ தெரியவில்லை, அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து தற்போது முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜயகாந்த், சத்யராஜ் இடையே இப்படி ஒரு போட்டியா? 25 வருஷம் கழிச்சு வெளிவந்த ஷாக்கிங் சீக்ரெட்ஸ்!!

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை பிரியங்கா சோப்ரா தனது அழகிய குழந்தையின் முகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here