
இந்திய திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் மாதவன். தற்போது இவர் 5 மொழிகளில் உருவாகி வரும் ‘டெஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஹீரோயினாக நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் ஆயுத எழுத்து திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்திருந்த நடிகர் சித்தார்த் 19 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்து நடிக்கிறார்.
இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் நிலையில் இதன் மோஷன் பிக்சர்ஸ் இணையத்தில் வெளியாகியிருந்தது. மேலும் காதலில் சொதப்புவது எப்படி, இறுதி சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் s. சஷிகாந்த் இப்படத்தை இயக்கி வருகிறார்.
விஜய்யை நிராகரித்த பாரதி ராஜா.., அதுவும் இந்த விஷயத்துக்காக..,உண்மையை உடைத்த எஸ்.ஏ.சி!!
இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் ஆயுத எழுத்து படத்தில் ஜோடியாக பார்த்த மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மினை மீண்டும் ஒரு படத்தில் பல வருடங்களுக்கு பார்ப்பதற்காக உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.