விஜய் 65 படத்தில் மடோனா செபாஸ்டியன்..? கசிந்த தகவல்..!

0
Madonna Sebastian
Madonna Sebastian

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் மழை பொழிந்த துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கேரள நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

விஜய் 65 படக்குழு:

விஜய் கடைசியாக நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா பாதிப்பு காரணமாக வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா குறையும் வரை தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பு குறைவு என்பதால் மாஸ்டர் வெளியாக நீண்ட நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. அவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி & சர்கார் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 65 படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்ட தகவலை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். இப்படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

பெயர் வைக்கப்படாத விஜய் 65 படத்தில் அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் கவண், பா பாண்டி, காதலும் கடந்து போகும், ஜூங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here