ஊரடங்கில் இருந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை – குழந்தைகளைக் காக்கும் பணியில் தம்பிதுரை..!

0
children dialysis technicians
children dialysis technicians

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகிறார் டயாலிசிஸ் டெக்னிசீயன் தம்பிதுரை. இவரை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் விஜயபாஸ்கர் இவருக்கு நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தம்பி துறை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மானியதஅல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பிதுரை, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டயாலிசிஸ் டெக்னீசியன் ஆக மூன்று வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

chennai dialysis technicians thanmbi thurai
chennai dialysis technicians thanmbi thurai

ஊரடங்கு தொடங்கியதில் இருந்து சில துணிகளை மற்றும் கொண்டு வந்தவர் 70 நாட்கள் ஆகியும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க வில்லை. இதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஊரடங்கு

இவருடன் சேர்ந்து பணியாற்றி வந்த டயாலிசிஸ் டெக்னீசியன் ஊரடங்கு காரணமாக வெளியூரில் சிக்கிக்கொண்டார். இதனால் தொடர்ந்து இவர் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு திறம்பட பணியாற்றி வருகிறார்.இதை பற்றி அவர் கூறுகையில், “தினசரி 5 குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்து வரும் தம்பிதுரை அவர்களின் மழலை சிரிப்பில், தன்னை உத்வேக படுத்திக் கொள்வதாக கூறுகிறார். ”தொடர்ந்து பணியாற்றுவதால் உடல் சோர்வு ஏற்படுகிறது. ஆனால், வலியுடன் வரும் குழந்தைகள் டயாலிசிஸ் கொடுத்த பிறகு சிரித்த முகத்துடன் இல்லம் திரும்புவார்கள் அதனை பார்க்கும் பொழுதெல்லாம் விடுமுறை எடுக்க விருப்பம் இருக்காது. ஆனாலும், வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம் அம்மாவிடம் வீடியோ காலில் பேசி மகிழ்வேன்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அதேபோல் மருத்துவமனையில் இருக்கும் அத்தனை ஊழியர்களும் தன்னிடம் நட்பாக பழகி உணவு, பகிர்ந்து கொள்வார்கள். என் நண்பர்கள் அவ்வப்போது என்னை வந்து சந்திப்பார்கள். இதுபோன்ற தருணங்கள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. முதலில் டயாலிசிஸ் டெக்னீசியன் ஆக பணியாற்றுவது எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் இங்கே வரும் ஒவ்வொரு குழந்தைகளும் வலி தாங்க முடியாமல் அழுகின்ற காட்சியை பார்க்க முடியாது. ஆனால் டயாலிசிஸ் செய்த பிறகு அவர்கள் சிரிக்கக்கூடிய காட்சிகளை பார்த்தால் அதை அப்படியே மறந்து விடும். அதற்காகவே இந்த பணியை நான் பிடித்து செய்ய ஆரம்பித்து விட்டேன். தற்போது என்னிடம் குழந்தைகள் உடனே ஒட்டிக் கொள்வார்கள்” என்றார் தம்பிதுரை.

சலூன் கடைக்காரரின் மகள் படிப்புச் செலவை அரசே ஏற்கும் – தமிழக முதல்வர் அறிவிப்பு..!

children dialysis technicians
children dialysis technicians

இதனை தொடர்ந்து தமிழக சுகாதார துறை அமைச்சர் தன்னை நேரில் வந்து பாராட்டியது தன்னை இன்னும் ஊக்குவிப்பதாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக பணியாற்றிய டயாலிசிஸ் டெக்னீசியன் தம்பிதுரை தற்காலிக பணியாளர் என்பது சற்று வேதனை தரும் தகவல். அவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும் என்பது அங்கு உள்ள அனைத்து ஊழியர்களின் எண்ணமாக உள்ளது. அரசு நிறைவேற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here