நயன்தாராவை தொடர்ந்து திருமண பந்தத்தில் நுழையும் கீர்த்தி சுரேஷ்.., மாப்பிள்ளை இவர் தான்!!

0
நயன்தாராவை தொடர்ந்து திருமண பந்தத்தில் நுழையும் கீர்த்தி சுரேஷ்.., மாப்பிள்ளை இவர் தான்!!
நயன்தாராவை தொடர்ந்து திருமண பந்தத்தில் நுழையும் கீர்த்தி சுரேஷ்.., மாப்பிள்ளை இவர் தான்!!

தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் கால் பதித்த கொஞ்ச நாளிலேயே இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு இவரை பிடித்து போக காரணமே அவரது தேர்ந்த நடிப்பு தான். ரஜினி முருகன் திரைப்படம் தான் அவரை தூக்கி விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து பக்கமும் பிஸியானார். இவரது கெரியர் நன்றாக போய்க் கொண்டிருந்த சமயத்தில் தான் திடீரென உடல் எடையை குறைத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. இப்பொழுது ஓரளவிற்கு மீண்டு வந்துள்ள நிலையில் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவரை பற்றிய சில வதந்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேற்றில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு.., செங்கல்பட்டில் நடந்த கோர சம்பவம்.., நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர்!!

அதாவது கீர்த்தி சுரேஷ்க்கு சில ஆண்டுகளாகவே மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் திருமணம் கூடிய விரைவில் நடக்க இருக்கிறதாம். அதுவும் மாப்பிள்ளையை கன்பார்ம் செய்து விட்டார்களாம். பிரபல தொழிலதிபர் என்ற தகவல் மட்டும் தான் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here