சேற்றில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு.., செங்கல்பட்டில் நடந்த கோர சம்பவம்.., நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர்!!

0
சேற்றில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு.., செங்கல்பட்டில் நடந்த கோர சம்பவம்.., நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர்!!
சேற்றில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு.., செங்கல்பட்டில் நடந்த கோர சம்பவம்.., நிவாரண நிதி வழங்கிய முதலமைச்சர்!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சேற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்லூரி மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சாத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளனர். இவர்கள் காலை 10.30 மணிக்கு திருப்போரூர் அருகே உள்ள சிதம்பர சுவாமி கோவில் கன்னகப்பட்டு குளத்தில் குளிக்க செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றனர். பின்னர் குளத்தில் எதிர்பாராத விதமாக இவர்கள் மூவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நீண்ட நேரம் மாணவர்களின் உடை, மொபைல், மற்றும் இருசக்கர வாகனம் இருப்பதை கண்டவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் இறந்த சடலத்தை ஒன்றன்பின் ஒன்றாக மீட்டனர்.

குரங்கு அம்மை வைரஸ் குறித்து புதிய தகவல்.,பெயருடன் உலக சுகாதார அமைப்பு கொடுத்த அறிவிப்பு!!

பின்னர் விசாரித்ததில் சாத்தாங்குப்பத்தை சேர்ந்த முருகேஷ், த/பெ. ரவி, உதயகுமார் த/பெ.ராஜு, விஜய் த/பெ.முனியன் என உறுதி செய்யப்பட்டது. மூவரும் பக்கத்து வீடுகளில் வசிக்கும் சொந்தக்காரர்கள் என்பதால் சாத்தாங்குப்பம் பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் வழங்கியதோடு தலா 2 லட்சம் நிதியுதவியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here