ஸ்லீவ் லேஸ் தான் உங்களுக்கு அழகே …! – ஒரிஜினல் பியூட்டியில் நாம் இருவர் நமக்கு இருவர் நாயகி!!

0

விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் ஹீரோவுக்கு தங்கச்சியாக நடித்து வருபவர் ஜனனி அசோக்குமார். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் மஞ்சள் நிற புடவையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

நடிகை ஜனனி அசோக்குமார் , தமிழில் நண்பேன்டா திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் சில வேடங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பல சீரியல்களிலும் தனது நடிப்பு திறமையை காட்டி உள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி ‘ சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் மாப்பிள்ளை சீரியல் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் உட்பட பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து உள்ளார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹீரோ மாயாவின் தங்கையாக ஒரு துணிச்சல் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். மேலும் தனது தங்கைக்கு அவளின் கணவன் முத்தரசனால் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வு தருதல் போன்ற கதாபாத்திரத்தில் மிகவும் திறமையாக நடித்திருப்பார்.

தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக அமைய பெற்றுள்ளது. அதாவது  ஸ்லீவ் லேஸில், மஞ்சள் நிற புடவையில் மயக்கும் கொள்ளை அழகில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்தில் அவர் துளி அளவும் மேக்கப் இல்லாமல் தோற்றமளிக்கிறார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரை ரசித்து வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here