
நடிகை நயன்தாராவை விட பல கோடி சம்பளம் அதிகமாக நடிகை தீபிகா படுகோன் வாங்க இருப்பதாக இணையதளத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தீபிகா படுகோனே
பாலிவுட் வட்டாரங்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோனே. சமீபத்தில் இவர் நடித்த பதான் திரைப்படம் ஆயிரம் கோடிகளை வசூலித்து மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. தற்போது பிரபல இயக்குனரான நாக் அஸ்வின் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ் நடித்து வரும் பிராஜெக்ட் கே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் அமிதாப் பச்சனுக்கு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து இணையதளத்தில் முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகுபலி பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் தீபிகா படுகோனே நடிப்பதற்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நாள் வரை ஹீரோயின்களில் அதிகமாக சம்பளம் வாங்கும் இடத்தில் ஒரு படத்திற்கு 4 அல்லது 5 கோடிகளை வாங்கி முதலாவதாக ஜொலித்து வந்தார் நயன்தாரா. தற்போது ப்ராஜெக்ட் ஏற்படத்தின் மூலம் தீபிகா படுகோனே அவரை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்க இருக்கிறார். ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.