கோபத்தால் எதுவும் கிடைக்க போறது இல்ல.., இழப்பு தான் அதிகம்.., ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்!!

0
கோபத்தால் எதுவும் கிடைக்க போறது இல்ல.., இழப்பு தான் அதிகம்.., ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்!!
கோபத்தால் எதுவும் கிடைக்க போறது இல்ல.., இழப்பு தான் அதிகம்.., ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சொப்பன சுந்தரி திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சொப்பன சுந்தரி

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்து ஹீரோயின் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்றவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் இவர் நடித்த கனா, க /பெ ரணசிங்கம் மற்றும் இரண்டாம் திட்டம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தற்போது முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறது. இவர் கடைசியாக நடித்த டிரைவர் ஜமுனா திரைப்படம் சரியாக போகவில்லை. தற்போது எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவான சொப்பன சுந்தரி படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் நடத்தினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, நான் ஹீரோயினாக அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு முக்கிய காரணம் என்னுடைய இயக்குனர்கள் தான். அவர்கள் இல்லை என்றால் இந்த இடத்திற்கு என்னால் வந்திருக்க முடியாது. ஒரு இயக்குனரால் மட்டுமே சிறந்த நடிகர், நடிகைகளை உருவாக்க முடியும். அதே போல் தான் சொப்பன சுந்தரி படத்தின் மூலம் எனக்கு காமெடியும் வரும் என்று எஸ்.ஜி. சார்லஸ் புரிய வைத்துள்ளார். ஏனென்றால் இதற்கு முன் நான் நடித்த படங்களில் எல்லாம் செண்டிமெண்ட் மற்றும் அழுத்தமான கேரக்டரில் தான் நடித்திருந்தேன்.

பாக்கியலட்சுமி சீரியலை இப்படி சொதப்பிடீங்களே.., வசமா சிக்குனீங்களா?? ஆதாரத்துடன் நிரூபணமான உண்மை!!

இந்த படத்தின் மூலம் காமெடியை கற்று கொண்டேன். இப்படத்தில் என்னை வைத்து இயக்க மாட்டேன் என்று எஸ்.ஜி. சார்லஸ் கோபமாக கூறினார். அதன் பின்னர் அவரை வீட்டிற்கு வரவழைத்து நேரில் பேசினேன். அவர் கோபத்தை மறந்து படத்தை பற்றி என்னிடம் பேச ஆரம்பித்து விட்டார். அவ்வளவு தாங்க கோபத்தால் எதுவும் கிடைக்க போறது இல்ல. இழப்பு தான் அதிகம் ஏற்படும். அந்த கோபத்தால் நான் ஏராளமானதை இழந்துருகிறேன் என்று கூறினார். அதன் பின்னர் படத்தை பற்றியும், இயக்குனரின் அணுகுமுறையை பற்றியும் விரிவாக பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here