விஷ்ணு விஷாலுக்கு எவ்ளோ பெரிய மனசு? மறைந்த வைரவன் குடும்பத்திற்காக அவர் செய்த காரியம்!!

0
விஷ்ணு விஷாலுக்கு எவ்ளோ பெரிய மனசு? மறைந்த வைரவன் குடும்பத்திற்காக அவர் செய்த காரியம்!!
விஷ்ணு விஷாலுக்கு எவ்ளோ பெரிய மனசு? மறைந்த வைரவன் குடும்பத்திற்காக அவர் செய்த காரியம்!!

காமெடி நடிகரான வைரவன், சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்காக விஷ்ணு விஷால் செய்துள்ள காரியம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பதிவு:

வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் வைரவன். குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள இவர், சமீப காலமாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இரு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில், கை கால்கள் வீங்கிப் போய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சிகிச்சை பலனளிக்காமல் திடீரென, உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான மதுரையில் நடைபெற்றது. இந்த நிலையில் வைரவனின் மருத்துவ செலவுக்கு நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் உதவி செய்தனர். இதனைத் தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை, தான் ஏற்பதாக அவரது மனைவியிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

அடிச்சுகிட்டு உருளுங்க., பிக் பாஸ் கொடுத்த கொலவெறி டாஸ்க்! இந்த வாரம் என்ன ஆகப்போகுதோ?

இது மட்டும் இல்லாமல் கடந்த ஆறு மாதமாக அவரது குடும்பத்துக்கு தான் இயன்ற உதவி செய்து வந்ததாகவும், இனியும் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், விஷ்ணு விஷாலை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here