விஜய்யை தொடர்ந்து பான் இந்தியா படத்தில் கமிட் ஆன விக்ரம் – வெற்றி இயக்குனருடன் கூட்டணி!!

0
மொத்தமும் மண்ணா போச்சு.. கோப்ரா படத்தால் மனமுடைந்த விக்ரம்.. வசூலை கேட்டு அழாத குறை தான்!

நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை கேள்வி பட்ட அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகர் விக்ரம்:

தமிழ் சினிமாவில் தன் தனிப்பட்ட முயற்சியால் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். இவர் தமிழ் சினிமாவில் என் காதல் கண்மணி படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அவர் சேது, அருள், தூள், சாமி போன்ற வெற்றி படங்களையும் தந்து உள்ளார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான் படத்தில் நடிகர் விக்ரம் நடித்து முடித்துள்ளார்.

மேலும் விக்ரமிற்கு பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு வரிசையாக காத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது அடுத்தாக இயக்குனர் ரஞ்சித் உடன் இணைந்து ஒரு படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் கோலார் சுரங்கத்தை வைத்து மையமாக எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படத்தை போல அதிரடி படமாக இருக்கும் என்று கூறி உள்ளனர் படக்குழுவினர்.

மேலும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் மாஸ்டர் படம் பான் இந்தியா படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here