தனுஷ் படத்தில் இருந்து விலகிய நாயகி? – வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

தற்போது தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சம்யுக்தா மேனன் இந்த படத்தில் இருந்து விலகினார் என செய்தி வெளியானது. இவர் விலகினரா இல்லையா என்பதை படக்குழுவினர் தற்போது தெளிவுபடுத்தியுள்ளனர்.

சம்யுக்தா மேனன்:

தனுஷ் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ”வாத்தி” என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. தமிழில் ”வாத்தி” என்றும் தெலுங்கில் ”சார்” என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் கமிட் ஆனார். ஆனால் இந்த திரைப்படம் குறித்தான பரபரப்பான செய்தி ஒன்று நேற்று வெளியானது.

அதாவது வாத்தி திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் சம்யுக்தா மேனன் திடீரென இந்த திரைப்படத்தில் இருந்து விலகினார் என நேற்று தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எதற்காக விலகினார் என தொடர்ந்து கேள்வி கேட்டபடி இருந்தனர். தற்போது இதற்கு படக்குழுவினர் பதில் அளித்துள்ளனர். சம்யுக்தா மேனன் தொடர்ந்து வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தான் இருக்கிறார். படத்தில் இருந்து அவர் விலகவில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here