வாரிசு படத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!

0
வாரிசு படத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!
வாரிசு படத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு திரைப்படம் :

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தது தான் வாரிசு. இப்படம் குடும்ப சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் மக்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. இப்படி வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினரையும் மற்றும் திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

ராதிகா சரத்குமாருக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கா? வீடியோவுடன் அவரே போட்ட வைரல் பதிவு!!

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராக வேலை பார்த்த சுனில் பாபு மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இவர் நெஞ்சுவலியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் சீதாராமன், துப்பாக்கி மற்றும் கஜினி போன்ற திரைப்படங்களில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here