சூப்பர் அப்டேட் .., தளபதி 67ல் களமிறங்கும் Agent Tina.., அப்ப கண்டிப்பா இது LCU தான் போல!!

0
சூப்பர் அப்டேட் .., தளபதி 67ல் களமிறங்கும் Agent Tina.., அப்ப கண்டிப்பா இது LCU தான் போல!!
சூப்பர் அப்டேட் .., தளபதி 67ல் களமிறங்கும் Agent Tina.., அப்ப கண்டிப்பா இது LCU தான் போல!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தை குறித்து இணையத்தில் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 67:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக 20 நாட்களை கடந்து வசூலை வாரி குவித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்த லோகேஷின் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகி, காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தளபதி 67 அப்டேட் என்று கூவி கூவி சோர்ந்து போன ரசிகர்களை தெம்பேத்தும் விதமாக படக்குழுவினர் கடந்த 4 நாட்களில் அப்டேட்-க்கு மேல் அப்டேட் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு படத்தோட டைட்டில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். அதற்காகவும் படத்தின் ப்ரோமோ வீடியோ-காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

“பரியேறும் பெருமாள்” பட நடிகர் தீடிர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

இந்த நிலையில் தளபதி 67 படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது . அதாவது விக்ரம் படத்தில் டினா கேரக்டரில் நடித்த டான்ஸ் மாஸ்டர் வசந்தி குரு தளபதி 67ல் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். கைதி படத்தில் நடித்த நெப்போலியன் கேரக்டர், விக்ரம் படத்தில் நடித்த டினா கேரக்டர் இந்த இரண்டு பேரும் தளபதி 67ல் இருக்காங்க என்றால் கண்டிப்பா இது LCU தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here