‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.., விஜய் ஆண்டனிக்கு இன்று அறுவை சிகிச்சை.., மருத்துவர்கள் தகவல்!!

0
'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.., விஜய் ஆண்டனிக்கு இன்று அறுவை சிகிச்சை.., மருத்துவர்கள் தகவல்!!
'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.., விஜய் ஆண்டனிக்கு இன்று அறுவை சிகிச்சை.., மருத்துவர்கள் தகவல்!!

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் வல்லமை மிக்கவராக இருப்பவர்தான் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், நான் மற்றும் சைத்தான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மலேசியாவில் இருக்கும் லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மற்றொரு படகில் மோதி விபத்து ஏற்பட்டது.

சர்ச்சைகளை கடந்து வெளியாகும் ஆதிபுருஷ்.., படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்த பிரபாஸ்!!!

அந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அவருக்கு முகத்திலும், வாய்ப்பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வாய் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், விஜய் ஆண்டனியை சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் படக்குழுவினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here