சர்ச்சைகளை கடந்து வெளியாகும் ஆதிபுருஷ்.., படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்த பிரபாஸ்!!!

0
சர்ச்சைகளை கடந்து வெளியாகும் ஆதிபுருஷ்.., படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்த பிரபாஸ்!!!
சர்ச்சைகளை கடந்து வெளியாகும் ஆதிபுருஷ்.., படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்த பிரபாஸ்!!!

பாகுபலி என்ற வெற்றி படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் பிரபாஸ். இதை தொடர்ந்து ராதே ஷ்யாம், சகோ போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் பாகுபலிக்கு பின்பு இவரது படங்கள் ஹிந்தியிலும் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தற்போது ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ், சயீப் அலிகான், கீர்த்திசனான் ஆகியோர் இணைந்து “ஆதிபுருஷ்” படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருந்தது.

அம்மாவான நடிகை ஹன்சிகா மோத்வானி .., கண்கலங்க வைத்த மாஸ் சம்பவம்!!

ஆனால் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளான காரணத்தால் மீண்டும் அந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு ஜூன் 16 தேதி வெளியாக உள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் பிரபாஸ் அவரது இணையதளப் பக்கத்தில் இதை உறுதி செய்யும் விதமாக இன்னும் படம் வெளியாவதற்கு 150 நாட்களே உள்ளன என பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இந்த படம் வரும் ஜூன் 16 ,2023 வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here