மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்… வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

0
மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!
மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

தமிழ் சினிமா துறையில் நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டு வைகை புயலாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் ஒரு சில வருடங்களாக ரெட் கார்டு சர்ச்சையில் சிக்கி இருந்ததால் திரையில் அவரை காண முடியவில்லை, இந்நிலையில் இந்த பிரச்சனை முடிவுற்ற நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது இவரின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னுடைய உடலமைப்பு, காமெடி கலந்த சரளமான தமிழ் பேச்சு போன்றவற்றால் மக்களை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் 1991ஆம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்ற கஸ்தூரி ராசா அவர்களின் படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். சினிமாவில் நுழைந்த ஆரம்பக்காலத்தில் ஒரு சில வினாடிகள் மட்டுமே இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!
மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்… வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

மேலும் அந்த காலத்தில் நகைச்சுவையில் தலை சிறந்து விளங்கிய கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்களுடன் இணைந்தே பல படங்களில் நடித்து வந்தார். அவ்வாறாகவே பல படங்களில் நடித்து வந்த இவர், பார்த்திபன் மற்றும் முரளி நடிப்பில், சேரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான வெற்றிக் கொடி கட்டு படத்தில் தனி காமெடி நடிகராக நடித்தார்.

மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!
மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்… வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

அந்த படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து பெரும் புகழ் பெற்றார். அன்றிலிருந்து இன்று வரை பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சங்கருக்கு இவருக்கும் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு ரெட் கார்டு அளித்தது.

மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!
மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த வைகை புயல்… வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

இதனால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் இருந்தார். இந்நிலையில் இந்த பிரச்சனை சமீபத்தில் நிறைவு பெற்றதை அடுத்து இவர் மீண்டும் திரையில் நடிக்க தொடங்கி உள்ளார். இதையடுத்து இவரின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இது அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here