உலகின் முதல் 22 காரட் தங்க வடா பாவ்: விலை ரூபாய் 2000 – விவரங்கள் உள்ளே!

0
உலகின் முதல் 22 காரட் தங்க வடா பாவ்: விலை ரூபாய் 2000 - விவரங்கள் உள்ளே!
உலகின் முதல் 22 காரட் தங்க வடா பாவ்: விலை ரூபாய் 2000 - விவரங்கள் உள்ளே!

உலகிலேயே முதல் முறையாக 22 கேரட் தங்க தாள்களில் ஆன இரண்டு அடுக்கு வடா பாவ் துபாய் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

தங்க வடா பாவ்:

துபாய் நாட்டில் உள்ள தெருக்களில் “வடா பாவ் ” என்றால் பிடிக்காது என்று சொல்பவர்களே இல்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு இந்த வடா பாவ் சிறப்பு மிகுந்ததாகவும், சாப்பிடுவோரை தன் பக்கம் இழுக்க கூடிய அளவிற்கு சுவையை கொண்டதாகவும் இருந்து வருகிறது. இந்த உணவை வெறுப்பவர்கள் இல்லை எனும் அளவுக்கு இந்த வடா பாவ் அங்குள்ள மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

இப்படிப்பட்ட சுவை மிகுந்த வடா பாவில் ஒரு மாற்றத்தையும், உலக சாதனையையும் துபாய் செய்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக 22 காரட் தங்கத்தில் ஆன வடா பாவ் ஐ உருவாக்கி தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. துபாயில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வடா பாவ் தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தினரால் விற்பனை செய்யப்படுகிறது.

உலகின் முதல் 22 காரட் தங்க வடா  பாவ்: விலை ரூபாய் 2000 - விவரங்கள் உள்ளே!
உலகின் முதல் 22 காரட் தங்க வடா பாவ்: விலை ரூபாய் 2000 – விவரங்கள் உள்ளே!

இந்த சிறப்பு மிகுந்த வடா பாவ்-ல் சுவையான உருளைக்கிழங்கு, டிரபிள் வெண்ணெய் மற்றும் சீஸ் ஆகியவை உள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 22 கேரட் தங்க இலைகளால் இந்த வடா பாவ் மூடப்பட்டிருப்பதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது. இந்த தங்க வடா பாவ் இந்திய மதிப்பில் ரூபாய் 2000 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here