வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” ரிலீஸ் தேதி வெளியீடு..,படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

0
வடிவேலுவின்
வடிவேலுவின் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" ரிலீஸ் தேதி வெளியீடு..,படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

வைகை புயல் வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ரிலீஸ் தேதி குறித்து முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் வைகை புயல் வடிவேலு. அவருடைய காமெடிக்கு சிரிக்காத ஆளே இருக்க முடியாது. சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். இதனை தொடர்ந்து சுராஜ் இயக்கி விஷால் நடித்த கத்தி சண்டை படத்தில் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது சந்திரமுகி 2, மாமன்னன், தலைநகரம் 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் கதாநாயகனாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆலியா மானசாவின் புது சீரியல் டைட்டில் வெளியீடு – ப்ரோமோவுடன் வெளியான சூப்பர் அப்டேட்!!

அதாவது இயக்குனர் சுராஜ் படைப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிசம்பர் மாதம் 9ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். மேலும் சுராஜ் – வடிவேலு நான்காவது முறையாக கூட்டணி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here