அய்யயோ.., சினிமா கேரியரை முடித்த உதயநிதி ஸ்டாலின்?? திடீர் முடிவால் உறைந்து போன ரசிகர்கள்!!

0
அய்யயோ.., சினிமா கேரியரை முடித்த உதயநிதி ஸ்டாலின்?? திடீர் முடிவால் உறைந்து போன ரசிகர்கள்!!
அய்யயோ.., சினிமா கேரியரை முடித்த உதயநிதி ஸ்டாலின்?? திடீர் முடிவால் உறைந்து போன ரசிகர்கள்!!

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான “கலகத் தலைவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் வருகிற நவம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. சமீப காலமாக வெளியாகும் எல்லா புதிய படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் துணிவு படத்தையும் உதயநிதி வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சினிமாவை விட்டு போக போறதாக உதயநிதி கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவர் கூறியதாவது, தற்போது மாமன்னர் படத்தில் நடித்து வருகிறேன்.

அடடே.., இதுக்கு தான் பாண்டியன் ஸ்டோர்ஸை விட்டு போனீங்களா.., நெனச்சதை சாதிச்சுடீங்களே காவியா!!

இதை தொடர்ந்து உலகநாயகன் தயாரிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளேன். ஆனால் இந்த கதையை நான் இன்னும் கேட்கவில்லை. அனேகமாக இதோட சினிமா கேரியரை முடித்து கொள்வேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் என்னால் அரசியலையும், சினிமாவையும் ஒரே நேரத்தில் சமாளிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. மேலும் நான் அரசியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here