உடல் சூட்டால் அவதிப்படுறீங்களா? இதை உடனே செஞ்சு பாருங்க, கண்டிப்பாக உஷ்ணம் தணியும்!!

0
உடல் சூட்டால் அவதிப்படுறீங்களா? இதை உடனே செஞ்சு பாருங்க, கண்டிப்பாக உஷ்ணம் தணியும்!!
உடல் சூட்டால் அவதிப்படுறீங்களா? இதை உடனே செஞ்சு பாருங்க, கண்டிப்பாக உஷ்ணம் தணியும்!!

நம்மில் பலருக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும். அதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து எழுந்த பின், அந்த இடத்தில் மற்றவர் வந்து அமரும் போது, “என்ன இப்படி சுடுது”, உன் உடம்பு ரொம்ப ஹீட்டா இருக்கா என்று கேட்கும் போது அந்த சமயம் நமக்கு மிகுந்த சங்கடத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த உடம்பு சூட்டால் வாய்ப்புண், கண் எரிச்சல், வயிற்று கோளாறுகள், தலைவலி, மலச்சிக்கல், தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் உருவாகிறது. எனவே இந்த பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கீழ் வரும் டிப்ஸ்களை follow செய்து பாருங்கள். கண்டிப்பாக சூடு தணிந்து உடல் குளிர்ச்சி ஆகி விடும்.

டிப்ஸ்:
  • வாரத்திற்கு 3 முறை பாசிப் பயறு, கடலை மாவு போட்டு குளித்தால் உடல் சூடு தணியும்.
  • தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து வாரத்திற்கு 1 முறை குளிப்பது நல்லது.
  • தினசரி பெரிய நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
  • தினமும் உணவுடன் மோர் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது வெந்தயம் கலந்து, இரவு முழுதும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உஷ்ணம் குறையும்.

  • உடல் சூட்டால் ஏற்படும் பரு, கொப்புளங்களுக்கு மஞ்சள் தூள் வேப்பிலை மிக்ஸை பூசலாம்.
  • இரவு தூங்குவதற்கு முன் உள்ளங்காலில் சிறிது விளக்கெண்ணெய் தடவி விட்டு தூங்கினால் உடல் சூடு குறையும்
  • இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நெய் நாள்தோறும் உணவில் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது.
  • கரும்பு ஜூஸ், மாதுளை ஜூஸ், முலாம்பழம் ஜூஸ் வாரத்திற்கு 4 முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், மற்றவர்கள் குடிக்கும் நீரின் அளவை விட அதிகமாக குடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here