பட்டையை கிளப்பும் S.J சூர்யாவின் “வதந்தி” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
பட்டையை கிளப்பும் S.J சூர்யாவின்
பட்டையை கிளப்பும் S.J சூர்யாவின் "வதந்தி" பர்ஸ்ட் லுக் போஸ்டர்.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் S.J சூர்யா நடித்த வதந்தி வெப் சீரிஸ் குறித்த ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் S.J சூர்யா:

கோலிவுட் வட்டாரங்களில் வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகர் S.J சூர்யா. தற்போது வில்லனாகவும், ஹீரோவாகவும் சினிமாவை கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து உயர்ந்த மனிதன், இறவாக்காலம், பொம்மை மற்றும் மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் நடித்த வெப் சீரிஸ் திரைப்படம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் நடிகர் S.J சூர்யா போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ள வெப் சீரிஸ் தான் வதந்தி. இந்த சீரிஸில் நடிகை சஞ்சனா,நாசர் மற்றும் லைலா முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

ஜனனியிடம் மயங்கும் சக்தி.., குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு.., எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்!!

மேலும் இந்த வதந்தி வெப் சீரிஸை இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ளனர். தற்போது இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை S.J சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் முழுக்க முழுக்க திரில்லர் படமாக இருக்கும் இந்த வதந்தி வெப் தொடர் அடுத்த மாதம் 2ம் தேதி அமேசான் தளத்தில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here