சபரி மலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் ,, அறிவுறுத்தலை வாபஸ் பெற்ற கேரள அரசு!!

0
சபரி மலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் ,, அறிவுறுத்தலை வாபஸ் பெற்ற கேரள அரசு!!
சபரி மலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் ,, அறிவுறுத்தலை வாபஸ் பெற்ற கேரள அரசு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள மாநில அரசு அறிவுறுத்தி உள்ளதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்

கேரள அரசு அறிவுறுத்தல்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில், வருடம்தோறும் மண்டல-மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். அந்த வகையில் நடப்பு வருட பூஜைக்காக நேற்று மாலை,கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2018ம் ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கொரோனா பரவல் காரணமாகவும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இது குறித்து கேரளா ஸ்டேட் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என்று மாநில அரசு வழங்கிய அறிவுறுத்தல் தற்போது வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

பட்டையை கிளப்பும் S.J சூர்யாவின் “வதந்தி” பர்ஸ்ட் லுக் போஸ்டர்.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

மேலும் தவறாக அச்சிடப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியானதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னதாக நடைமுறையில் உள்ள 10 வயதுக்கு கீழ், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள், மற்ற வயதினர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என விளக்கம் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here