IND vs NZ: அதிக ரன்கள் அடித்த டாப் 5 ல் ஒரே இந்திய வீரர்…, நாளை போட்டியில் இந்த நிலை மாறுமா??

0
IND vs NZ: அதிக ரன்கள் அடித்த டாப் 5 ல் ஒரே இந்திய வீரர்..., நாளை போட்டியில் இந்த நிலை மாறுமா??
IND vs NZ: அதிக ரன்கள் அடித்த டாப் 5 ல் ஒரே இந்திய வீரர்..., நாளை போட்டியில் இந்த நிலை மாறுமா??

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் டாப் 5 ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார்.

IND vs NZ:

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை நாளை விளையாட உள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் இந்த இரு அணிகளும் அரையிறுதியுடன் வெளியேறியதால், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த எதிர்பார்ப்பை உண்மையாக்கும் வகையில், இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில், அதிக ரன்கள் அடித்த டாப் 5 பட்டியலில் பார்த்தால், 511 ரன்களுடன் இந்தியாவின் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்…, சென்னையில் நடத்த திட்டம்மா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இவரை தொடர்ந்து, நியூசிலாந்தின் கொலின் முன்ரோ 426, மார்டின் கப்டில் 380, கேன் வில்லியம்சன் 358 மற்றும் ராஸ் டெய்லர் 349 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த டாப் 5 வீரர்களில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார் என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில், நாளைய போட்டியில் இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here