ரஜினியின் இடத்தை அப்பட்டமாக ஆக்கிரமிக்கும் சிவகார்த்திகேயன் – கணக்கச்சிதமாக காய் நகர்த்தி அசத்தல்!!

0
ரஜினியின் இடத்தை அப்பட்டமாக ஆக்கிரமிக்கும் சிவகார்த்திகேயன் - கணக்கச்சிதமாக காய் நகர்த்தி அசத்தல்!!

நடிகர் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை ஆக்கிரமிக்க, புதிய திட்டங்களுடன் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரிய திட்டம்:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது, டான் திரைப்படத்தை தொடர்ந்து  அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது, படங்களை வெற்றியாக்க புது பிளான் ஒன்று போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மண்டேலா படத்தை இயக்கிய  மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே ரஜினி நடிப்பில் மாவீரன் என்ற ஒரு படம் வெளியாகி உள்ளது.

தற்போது அந்தப் படத்தின் டைட்டிலை வைத்து, சிவகார்த்திகேயன் நடிக்க திட்டமிட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ரஜினியின் வேலைக்காரன் படத்தின் டைட்டிலை வைத்து, வேலைக்காரன் என்ற ஒரு படத்தை கொடுத்தார்.

தற்போது இணையத்தில், வேலைக்காரன் என தேடினால்  இவரது படம் தான் முதலில் வந்து நிற்கிறது. இதை கணக்கில் கொண்டு, பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக திகழ்ந்து வந்த சிவா  தற்போது சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்க  கணக்கச்சிதமாக காய் நகர்த்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here