
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அயலான் திரைப்படம்:
சின்னத்திரையில் வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இப்பொழுது அவர் நடித்த மாவீரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் நிலையில், தற்போது அதற்கு உயிர் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆமாங்க, இந்த அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அயலான் திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
E.B. பில் கட்ட போறீங்களா., இனிமேல் இது தான் நடைமுறை.., மின் வாரியம் அதிரடி நடவடிக்கை!!!
அதாவது சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை, பாலிவுட் நடிகர் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் ஹிந்தியில் வெளியிடுகின்றது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.