E.B. பில் கட்ட போறீங்களா., இனிமேல் இது தான் நடைமுறை.., மின் வாரியம் அதிரடி நடவடிக்கை!!!

0
E.B. பில் கட்ட போறீங்களா., இனிமேல் இது தான் நடைமுறை.., மின் வாரியம் அதிரடி நடவடிக்கை!!!
E.B. பில் கட்ட போறீங்களா., இனிமேல் இது தான் நடைமுறை.., மின் வாரியம் அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் டிஜிட்டல் முறையிலும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நுகர்வோர்கள் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் ரூ.5,000க்கும் மேல் உள்ள மின் கட்டணங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே மின்வாரியம் வசூல் செய்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி மொத்த வருவாயில் 74 சதவீதம் ஆன்லைனில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக மின்வாரியம் புதிய மாற்றங்களை அரசுக்கு முன்மொழிந்துள்ளது. அதில் ரூ.1,000க்கு மேல் மின் கட்டணம் அலுவலக கவுண்டர்களில் வசூல் செய்யப்படாது. ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை மூலமாக மட்டுமே வசூல் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

குடும்ப அட்டைதார்களுக்கு அடித்த லக்.., இனி இதுவும் கண்டிப்பா கிடைக்கும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இத்திட்டம் மூலம் மின்வாரிய அலுவலகங்களில் அதிக பணத்தை கையாள வேண்டிய அவசியம் இல்லை என மின்வாரிய அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அறியாதவர்கள் கணினி மையத்தில் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என கலவையான விமர்சனம் எழுந்து வருகிறது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து தகுந்த முடிவு எடுக்கும் என பலரும் நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here