
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நியாய விலை கடை மூலம், மலிவான விலையில் ரேஷன் பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இதில், அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள் மற்றும் சீனி உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கும். இதனை ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனை தொடர்ந்து, ரேஷன் பொருட்களில், வழங்கப்பட்டு வரும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுடன், சிறுதானிய பொருட்களையும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முக்கிய தகவலை, தமிழக உணவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதாவது, சர்வதேச நாடுகள் சார்பாக, இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்., இந்த அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி?? அலைமோதும் கூட்டம்!!!
இதனால், ரேஷன் கடைகளில், கூட்டுறவு சங்கங்கள் மூலம், கேழ்வரகு விற்பனை விரைவில் தொடங்கும் என கூறியுள்ளார். மேலும், விவசாயிகளிடம் கம்பு, சோளம் உள்ளிட்ட சிறு தானிய பொருட்களையும் அதிக அளவில் உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ரேஷன் கடைகளிலும் இத்தகைய பொருட்களை விரைவில் விற்பனை செய்யவும் திட்டங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரேஷன் கடைகளை புதுப்பித்து தரம் உயர்த்தவும், கிடங்குகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவுபடி 30 % சம்பளம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.