உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா…, வெளியான புள்ளி விவரம் இதோ!!

0
உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா..., வெளியான புள்ளி விவரம் இதோ!!
உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா..., வெளியான புள்ளி விவரம் இதோ!!

ஐசிசியின் மூன்று வடிவ தொடர்களிலும் அணிகளுக்கான தரவரிசையில், இந்திய அணி மகத்தான சாதனையை படைத்துள்ளது.

இந்திய அணி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் ஆகிய மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் போட்டிகளின் வெற்றிகளை பொறுத்து தரவரிசையை புதுப்பித்து வருகிறது. இந்த வகையில், இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வெல்ல தவறினாலும், தொடர்ந்து 267 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு காரணம், கடந்த ஆண்டு நடைபெற்ற இருதரப்பு டி20 தொடர்களை அதிகமாக இந்திய அணி வென்றதே ஆகும். மேலும், ஒருநாள் தொடருக்கான தரவரிசையில், தலா 113 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, டெஸ்ட் தொடருக்கான தரவரிசையிலும், இந்திய அணி (121) முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆசிய கோப்பை 2023: இந்தியா, பாகிஸ்தானுக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் புதிய அணி!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய அணி, கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்–கவாஸ்கர் டிராபியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, எதிர்வரும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் இந்திய அணி வென்றால், தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஐசிசியின் மூன்று வடிவ தரவரிசையிலும், இந்திய அணி, டெஸ்ட் மற்றும் டி20 யில் முதலிடத்திலும், ஒருநாள் தொடரில் 3 வது இடத்தையும் பிடித்து உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here