சிம்புவின் அடுத்த அவதாரம் இதுதான்.., பழைய பார்ம்முக்கு திரும்பிட்டீங்களா?? ட்ரெண்டிங்காகும் நியூ கிளிக்!!

0
சிம்புவின் அடுத்த அவதாரம் இதுதான்.., பழைய பார்ம்முக்கு திரும்பிட்டீங்களா?? ட்ரெண்டிங்காகும் நியூ கிளிக்!!
சிம்புவின் அடுத்த அவதாரம் இதுதான்.., பழைய பார்ம்முக்கு திரும்பிட்டீங்களா?? ட்ரெண்டிங்காகும் நியூ கிளிக்!!

தற்போது வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் சிம்புவின் நியூ லுக் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சிம்பு:

சினிமாவில் பல பிரச்சனைகளை சந்தித்த ஒரு நடிகர் என்றால் அது நடிகர் சிம்பு தான். இவருக்கு மிகப்பெரிய பலமே அவருடைய ரசிகர்கள் என்றால் அது மிகையாகாது. சமீபத்தில் வெளியான எந்த திரைப்படமும் சிம்புக்கு கை கொடுக்காத நிலையில், மாநாடு திரைப்படம் மூலம் திரும்ப பழைய பார்முக்கு வந்தார்.

இந்நிலையில் இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் எந்த வித நெகட்டிவ் விமர்சனங்களை பெறாமல், நடிகர் சிம்புவின் நடிப்பையும் மற்றும் ஏ ஆர் ரகுமான் இசையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய சிம்பு, மேலும் குஷி படுத்தும் விதமாக ஒரு புகைப்படம் வலம் வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் சிம்பு உடல் எடையை ஏற்றி, சட்டை பட்டனை கழற்றி விட்டு மாஸ் ஆக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அவரின் நியூ லுக் சமூக வலைதளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது. குறிப்பாக இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here