தினேஷ் கார்த்திக் VS ரிஷப் பந்த்.., ப்ளேயிங் 11ல் களமிறங்கப் போவது யார்?? முழு விவரம் இதோ!!

0

T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் களமிறங்க போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி!!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை BCCI அண்மையில் வெளியிட்டது. இந்த அணியில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் இடம்பிடித்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரில் யார் ப்ளேயிங் 11ல் களமிறங்க போகிறார்கள் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணிக்கான ப்ளேயிங் 11ல் தினேஷ் கார்த்திக் களமிறங்குவது உறுதியாகி விட்டது.

இதற்காக இவர் இந்திய அணியில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த ஆட்டத்தின் மூலம் பெஸ்ட் ஃபினிஷர் என்ற பெயரையும் ரசிகர்களிடையே பெற்றார். இவரது விடா முயற்சியால் ப்ளேயிங் 11ல் இடம்பிடித்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரிஷப் பந்த் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஒன்றை கூட சரியாக பயன்படுத்த வில்லை. இதனால் இவர் ப்ளேயிங் 11ல் களமிறங்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

ஆனாலும் இந்திய நிர்வாகம் இவரை அணியில் வைத்திருக்க ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அதாவது இந்திய T20 அணியில் இடது கை பேட்ஸ்மேனாக தற்போது ஜடேஜா மட்டும் உள்ளார். அவருக்கு அடுத்து யார் என்று பார்த்தால் அது ரிஷப் பந்த் மட்டும் தான். இதனால் தான் இந்திய அணி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து கொண்டே வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here