சென்னை ஓபன் டென்னிஸ்.., இந்திய வீராங்கனை வெளியேற்றம்!!

0
சென்னை ஓபன் டென்னிஸ்.., இந்திய வீராங்கனை வெளியேற்றம்!!
சென்னை ஓபன் டென்னிஸ்.., இந்திய வீராங்கனை வெளியேற்றம்!!

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி தோல்வி அடைந்து வெளியேறினார்.

கர்மன் தண்டி!!

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச பெண்கள் ஓபன் டென்னிஸ் தொடருக்கான 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி, கனடாவின் யூஜெனி புசார்ட்டை எதிர்கொண்டார்.

இருவருக்கும் இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து கர்மன் தண்டி வெளியேறினார்.இதே போன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 17 வயது இளம் வீராங்கனை லின்டா புருவிர்தோவா, சுவீடன் நாட்டைச் சேர்ந்த ரெபக்கா பீட்டர்சனை எதிர்கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய புருவிர்தோவா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். இதே போன்று மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் நாவ் ஹிபினோ 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் குவாங் வாங்கை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here